Pages

Monday, 3 November 2014

ஜித்தா மாநகரில் சங்கமித்த சமுதாய சொந்தங்கள்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத்தலைவர் மௌலவி J.S. ரிஃபாயி அவர்களின் புனித உம்ரா பயணத்தை முன்னிட்டு கடந்த 14-02-2014 வெள்ளியன்று ஜித்தாவில் சமுதாய சொந்தங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஜித்தா மண்டல தமுமுக ஏற்பாடு செய்திருந்தது.
பொதுவாக சவூதி அரேபியாவில் இது போன்ற அரசியல் நிகழ்ச்சிகளை அரசாங்கம் அனுமதிப்பதில்லை. அதனால் நாம்  பெரிதாக எந்த விளம்பரமும் செய்யாமல் குறிப்பிட்ட சகோதரர்களை தொலைபேசிமின்னஞ்சல், SMS வாயிலாக மட்டுமே அழைப்புக் கொடுத்தோம். ஆனால் தாய் கழக தலைவரின் உரைவீச்சை கேட்க நாம் அழைக்காமலேயே பெரும் திரளாக மக்கள் சங்கமித்துதமுமுக அழைத்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அதிக கெடுபிடி உள்ள சவூதியிலும் ஒன்று கூடுவோம் என்பதை மீண்டும் நிரூபித்தார்கள். தமிழக முஸ்லிம்களின் இதயத்துடிப்பு தமுமுக என்பது இதன் மூலம் நிருபமானது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சிக்கு ஜித்தா மண்டலத்தலைவர் புதுமடம் இப்றாஹிம் தலைமை வகிக்கயான்பு கிளை பேச்சாளர் முஹம்மது ஜபருல்லாஹ் கிராஅத் ஓதி வரவேற்புரை நிகழ்த்தினார்.'இஸ்லாமும் சமுக சேவையும்என்ற  தலைப்பில் சிற்றுரையாற்றிய ஜித்தா மண்டலப் பொருளாளர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஜமாலி அவர்கள்சமுதாயச் சேவை செய்வதை இஸ்லாம் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை இரத்தினச் சுருக்கமாக எடுத்துக்கூறினார்.

அடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு மண்டல நிர்வாகிகளின் அறிமுகத்திற்குப்பின், சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமுமுக & மமக தலைவர் J.S. ரிபாயி ரஷாதி அவர்கள்'இன்றைய அரசியலில் மனித நேய மக்கள் கட்சிஎன்ற தலைப்பில் தனது உரையைத் துவங்கினார்.
அவர்கள் உரையில் நமது மார்க்கம் சமுதாயப் பணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி ஆரம்பித்த தலைவர், முஸ்லிம்களை கருவறுத்து நரமாமிச வெறியன் மோடியை தமிழக ஊடகங்கள் புகழாரம் சூட்டி வருவதை பட்டியலிட்டுஇது வெறும் மாயைதான் என்பதை புள்ளி விபரங்களுடன் கூறினார். மேலும் மதசார்பற்ற கூட்டணி ஏற்பட தமுமுக செய்துவரும் முயற்சிகளையும் எடுத்துக் கூறினார்.

மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மமக எம்.எல் ஏக்கள் செய்து வரும் பணிகளையும் சட்டசபையில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பட்டியலிட்டார். அடுத்து அதிமுக கூட்டணியிலிருந்து திமுக கூட்டணிக்கு மாறிய காரணங்களையும் விளக்கினார்.
தமுமுக தலைவரின் உரையை அனைவரும் கவனமாகவும் அமைதியாகவும் கேட்டனர். மஃரிப் தொழுகையுடன் நிகழ்ச்சியை முடிப்பதாக இருந்த நாம்மக்களின் உற்சாகத்தால் இஷாவரை நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டது.
பிறகு சில தீர்மானங்களை மேற்கு மண்டலப் பொருளாளர் ஜீஸான் சம்சுதீன் வாசித்தார். அடுத்து கேள்வி கேட்பதற்கு சில நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. நிறைய சகோதரர்கள் ஆர்வத்துடன் தமுமுக மமக செயல்பாடுகளைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு அழகான முறையில் தலைவர் பதில் சென்னது அருமையாக இருந்தது. இஷா தொழுகைக்குப் பின் ஜித்தா தமிழ் தஃவா கமிட்டி மூலம் செனய்யா தஃவா சென்டரில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இஷா தொழுகையோடு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சகோதர அமைப்பான  ஜித்தா தமிழ் தஃவா கமிட்டி நிர்வாகிகள்துறைமுக இஸ்லாமிய அழைப்பக பொறுப்பாளர்கள்,ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள்ஷரபிய்யா நண்பர்கள் அமைப்பினர்,மெப்கோ அமைப்பினர்அதிரை ஜமாத்தார்கள்எஸ்.டி.பி.யை சேர்ந்தவர்கள் மற்றும் ஜித்தா, யான்புஜிசான்மக்கா நகரங்களின் தமுமுக நிர்வாகிகள் மற்றும் போராளிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை  மேற்கு மண்டல நிர்வாகிகளான
புதுமடம்இப்றாஹிம்காரைக்கால் அப்துல் மஜித்மற்றும் ஜித்தா நகர நிர்வாகிகள் இம்தாதுல்லாஹ் ஜமாலிஇஸ்ஹாக்புதுமடம் அப்துல் மஜித் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள். புகழணைத்தும் ஏக இறைவனுக்கே 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வாக்குரிமையை நிலைநாட்ட(பிலிப்பைன்ஸ்,சிரியா மற்றம் பாகிஸ்தான்) போன்ற நாடுகளைப்போல் தூதரங்களில் வாக்களிக்க உரிமை வேண்டும்.

2.கேரளாவில் உள்ளது போல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும்.

3.வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வயதான நிலையில் ஊர் திரும்பும் போது தனிநல வாரியம் மூலம் தமிழக அரசு உதவிகள் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

4.துபாயிலிருந்து Budjet Airlines இயங்குவது போன்று சவூதி அரேபியாவில் அனைத்து நகரங்களிலிருந்தும் சென்னைக்கு குறைந்த டிக்கெட்டில் Budjet Airlines இயக்கிட ஆவண செய்ய வேண்டும்.

மேற்கண்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முக்கிய கோரிக்கைகளை சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.

மேற்கு மண்டல புதிய நிர்வாகிகள்

தலைவர்                     : காரைக்கால் இ.அப்துல் மஜிது -  ஜித்தா                            0553055601
துணைத் தலைவர்     : புதுமடம் இப்ராஹிம் – ஜித்தா                                            0531458500
செயலாளர்                  : பந்தநல்லூர் அ.ஷாஜகான் யான்பு                                      0502359214
துணைச்செயலாளர்   : கீழை இர்பான் மக்கா                                                           0590618165
துணைச்செயலாளார் :பார்த்திபனூர் உபைதுல்லாஹ் ஜிசான்                               0535355349
துணைச்செயலாளர்   : மரைக்காயர் மதினா                                                            0541505818
பொருளாளர்                : தூத்துகுடி சம்சுதீன் ஜீசான்                                                 0507642295
ஒருங்கிணைப்பாளர்   : உடன்குடி அபுபக்கர் சித்திக் – யான்பு                                  0507342059

ஜித்தா மாநகர புதிய நிர்வாகிகள்

தலைவர்                    : மௌலவி இம்தாதுல்லாஹ் ஜமாலி லால்பேட்டை           0532690094
துணைத் தலைவர்    : செல்வகனி பரமக்குடி                                                             0530826958
செயலாளர்                 : ராஜா நாசர் மேலப்பாளையம்                                               0551818117
துணைச் செயலாளர் : இல்லியாஸ்                                                                            0560013452
துணைச் செயலாளர் : அப்துல் காதர் திருமங்கலகுடி                                               0508238199
பொருளாளர்               : இஸ்ஹாக் அய்யம்பேட்டை                                                 0508106519
ஒருங்கிணைப்பாளர்  : ஜலால் - நீடுர்                                                                          0501611093
மக்கள் தொடர்பாளர்  : மீரான்                                                                                       0535364615
தொண்டர் அணி செயலாளர் : புதுமடம் அப்துல் மஜிது                                            0507725076
வர்தகஅணி செயலாளாளர்கள் : சுல்தான் மரைக்காயர்பட்டினம்
                                                        ரஹ்மத்அலி காரைக்கால்.
கௌரவ ஆலோசகர்    : லியாக்கத் அலி கொல்லாபுரம்                                             0500306806

மஹ்ஜர் கிளை - ஜித்தா புதிய நிர்வாகிகள்

தலைவர்                   : மொய்தீன் புளியங்குடி                                                               0556426889
துணைத் தலைவர்   : சமிர் ஏர்வாடி                                                                              0532692771
செயலாளர்                : மியாம் கான் பத்தமடை                                                            0502048588
துனைச் செயலாளர் : புதுமடம் உசேன்                                                                        0555698834
பொருளாளர்             : கலிபத்துல்லாஹ் புதுமடம்                                                       0554509610

செனய்யா தஃவா சென்டரில் தமுமுக தலைவர்

புனித உம்ரா பயணத்தை முடித்த தமுமுக தலைவர் மௌலவி ரிஃபாயி அவர்கள் ஜித்தாவிற்காக ஒரு நாள் மட்டுமே ஒதுக்கியதால் கடந்த வெள்ளிக்கிழமையில் சமுதாய சொந்தங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஜித்தா மண்டல தமுமுக ஏற்பாடு செய்திருந்தது.
குறுகிய நேரமே இருந்ததால்  நம் சகோதர அமைப்பான தமிழ் தஃவா கமிட்டி மூலம் பொதுநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலாததால் செனய்யா தஃவா சென்டரில் சிறப்பு கலந்துறையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் செனய்யா சென்டரின் தமிழ் அழைப்பாளர் மௌலவி இப்றாஹிம் மதனி மற்றும்          கமிட்டியின் நிர்வாகிகள்செயற்குழுபொதுக்குழு உறுப்பினர்கள்,செனய்யா தமிழ் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர் தனது உரையில் இஸ்லாம் சமூக பணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குர்ஆன் ஹதீஸை மேற்கோள் காட்டிதமுமுக செய்துவரும் பணிகளை சுருக்கமாக எடுத்துக்கூறினார். பிறகு பல கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்டது. பிறகு கூட்டம் துவாவோடு இனிதே நிறைவு பெற்றது.

மதீனா கிளையின் புதிய நிர்வாகிகள்

சவுதிஅரேபியா மேற்கு மண்டலம் மதீனா கிளையின் புதிய நிர்வாகிகள் மாநில தலைவர் j.s ரிபாய் அவர்கள் முன்னிலையில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்



தலைவர்                          : முஹம்மது அப்துல் காதர் – அறந்தாங்கி
செயலாளர்                      : சுல்தான்- முதுகுளத்தூர்
பொருளாளர்                    : சையத் இம்ரான்- மீனாம்பூர்
துணைத்தலைவர்           : சதாம் உசேன் – திருச்சி
துணைச்செயலாளர்கள்  : சேருதீன் – அடியக்கமங்கலம்
                                             ஹாரிஸ் – லால்பேட்டை
                                            அஹம்மது பயாஸ் – சித்தார்க்கோட்டை
                                            தீன் – நாகபட்டிணம்
                                            பயாஸ் அஹம்மது – பெரம்மலூர்
மக்கள் தொடர்பாள்ர்கள் :  நசீர் – கல்பாக்கம்
                                             சையது இப்றாகிம்- மதுரை
                                             அக்பர்-