Pages

Wednesday, 12 June 2013

இன்றைய செய்தியும்.. இஸ்லாம் கூறும் தீர்வும்... (பாகம் - 2)


- உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
இன்றைய செய்தி :   

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்குத் தீர்வு என்ன?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=615969
பதிவு செய்த நாள் :டிசம்பர் 31-12-2012   (தினமலர்)

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன.பெண்களை கடவுளாக போற்றும் நமது நாட்டில் ஏன் இந்த நிலை? நமது கலாச்சாரம் முறையாகபாதுகாக்கப்படவில்லையா? இத்தகைய சீரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிதான் என்ன? இன்னும் நாம் பழங்கால சட்டங்களையே பின்பற்ற போகிறோமா அல்லது மாற்றம் தான்பிரச்னைக்கு தீர்வா என இந்திய கிரிமினல் சட்டங்களை கடுமையாக்க வேண்டியகாலக்கட்டத்தில் இருக்கின்றோம். ஏதாவது பிரச்னை வரும்போது தான் இதன் வலிகள் நமக்குஉணர முடிகிறது. மனித ஒழுக்கம் குறையும் போது குபீரென பிரச்னைகள் உருவெடுக்கின்றன.நாட்டில் நாள்தோறும் எத்தனையோ குற்றங்கள் நடந்து வந்தாலும் , ஒரு சில குற்றநடவடிக்கைகள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதுடன் அனைவராலும் பேசக்கூடிய விஷயமாகிவிடுகிறது. காரணம் சம்பவத்தின் தன்மை மற்றும் கொடூர செயல் ஆகியனதான். என்றாலும்பாதிக்கப்பட்ட விஷயம் விழிப்புணர்வு காரணமாக விஸ்வரூபமெடுக்கிறது. இதற்குசான்றுதான் டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு. போதையில் இருந்தவர்கள் இந்த செயலில்ஈடுபட்டுள்ளனர். இவர் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரம் அனைவரையும் கோபத்தின்உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் உயிர் பிழைத்து விடுவாரா என்ற ஏக்கம் இந்தியாமுழுவதும் எழுந்தது. ஆனால் அவர் இன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்றுவிட்டார்.
இது போன்ற சோகத்திற்கும் , கொடிய விஷயத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமாயின் என்னநடவடிக்கை இருக்கலாம் ? சில நாடுகளைப் போல கண்ணுக்கு கண், கல் வீசி கொல் என்றுகொண்டு வர முடியுமா இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் இது ஒன்றி போகமுடியுமா? அப்படியானால் என்ன தான் தீர்வு ? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால் இதற்க்கு தீர்வு என்ன ?
இஸ்லாம் கூறும் தீர்வு :
இஸ்லாம் என்றமார்க்கத்தின் சிறிய சட்டங்கள் கூட சர்வ வல்லமை படைத்த இறைவன் ஒருவனாலேயே அருளப்பட்டவைகளாக உள்ளன. மனித கையாடல்களுக்கு  உட்படாத அல்குரானும் அல்சுன்னாவும் பெண்ணினத்திற்கு எதிரான வன்முறைகளை  தடுப்பதற்கு சிறந்த வழிவகைகளை சொல்லித்தருகின்றன. இன்றைய உலகம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான அச்சுறுதலால் அல்லல்பட்டு கொண்டிருகின்றது. பெண்கள் பூரண சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் என பொன்  ழுத்துகளில் குறிக்கப்பட்டும்பல சட்டங்கள்தண்டனைகள் இயற்றப்பட்டும் கூட பெண் தன் வீட்டில் தனித்து சுதந்திரமான பாதுகாப்புடன் இருக்கும் நிலையை ஏற்படுத்த முடியவில்லை. பாடசாலைபஸ்பொது இடங்கள்அலுவகங்கள் என்று எங்கும் பெண்கள் பாலியல் இம்சைகளை அனுபவித்தே வருகின்றார்கள். வேலியே பயிரை மேய்வதை போல சொந்த உறவினர்களே பச்சிளம் பாலகர் தொடக்கம் பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதை அன்றாடம் கண்டும் கேட்டும் வருகின்றோம்.
அறியாமை இருளை விலக்கி அறிவொளியை ஏற்படுத்தும் புனித தொழில்புரியும் ஒரு சில ஆசிரியர்கள் கூட மாணவிகளை பாலியல் இம்சைக்கு உட்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும்.இவ்வாறான செய்திகள் பெண்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு ஊருவிளைவிப்பதையும் அவர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு இன்மை நிலவுவதையுமே குறிக்கின்றன.
இந்நிலை மாறி பெண்கள் சுதந்திரம்  உண்மைப்படுதபட வேண்டுமானால் பெண்களின் உரிமைகளை போற்றிப்பாதுகாக்கும் தீனுல் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்த படவேண்டும். இஸ்லாம் இவ்வாறான தீமைகள் சமூகத்தில் ஏற்படுவதை தடுக்க பல்வேறு அம்சங்களை நடைமுறைபடுத்துமாறு கூறியுள்ளது. அவை வெறுமனே கோட்பாடு ரீதியானவை அல்ல.சுமார் பதினான்கு நூற்றாண்டு காலமாக அவற்றை அது நடைமுறைபடுத்தியும் காட்டியுள்ளது. அவற்றில் பிரதானமானவற்றை இங்கே பார்ப்போம்.
பெண்கள் உடை :
மனிதன் செய்யும் குற்றங்கள் தொடர்பில்அக்குற்றங்கள் நிகழும் காரணம்பின்புலம் என்பவற்றை தடுப்பதில் இஸ்லாமிய சட்டங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. எனவேபாலியல் குற்றங்கள் விசயத்தில் வக்கிரமான பாலுணர்வைத் தூண்டகூடிய எந்த செயலையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அவ்வகையில் அது பெண்கள் அங்கம் தெரியும் வண்ணம் அரைகுறை ஆடை அணிந்து ஆண்கள் மத்தியில் வருவதை தடை செய்கிறது. பெண்களின் உடலமைப்பு ஆண்களை கவரும் வண்ணம் அமைந்த்திருப்பதால்பெரும்பாலும் வெளியில் தெரியும் முகம்கைகள் தவிர ஒரு பெண் தனது ஏனைய பாகங்களை மறைக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது. ஆண்கள் இச்சையின்பால் தூண்டப்படாது தடுக்க இது பிரதான வழிமுறையாகும். இந்நடைமுறையால் ஆண்களின் கீழ்த்தரமான பார்வைகளிலிருந்து நாம் பாதுகாப்பு பெறமுடியும். நமக்கு கண்ணியமும் பாதுகாப்பும் கிடைக்கிறது.
தனிமையில் பிரயாணம் :
பெண்கள் தனிமையில் பிரயாணம் செய்வதை இஸ்லாம் எவ்விதத்திலும் விரும்பவில்லை. காரணம்ஒரு பெண் தனிமையில் பிரயாணிக்கும் போது பல்வேறு இன்னல்களை அனுபவிப்பாள் என்பதேயாகும். நாம் பத்திரிகைகள் வாயிலாக அன்றாடம் இத்தகைய செய்திகளை கேள்விபடுகின்றோம். பெண்கள் தனியாக பிரயாணம் செய்வதை ஆகுமாக்கப்பட்ட ஹஜ் கடமையிலும் கூட இஸ்லாம் தடைசெய்துள்ளது.எவ்விதக் கட்டாய கடமையாயினும் பெண்கள் வீட்டை விட்டு துணையுடன் தான் பிரயாணம் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய ஷரியாவின் கட்டளை. இக்கட்டளைப்படி பெண்கள் பிரயாணங்களை தங்கள் ஆகுமான உறவுநிலை ஆண்களுடன் (மஹ்ரமிகளுடன்) மட்டும் அமைத்து கொள்ளுதல் பாதுகாப்பானது.
திருமணத்தை பிற்படுத்தாதிருத்தல் :
இன்றைய சூழலில் பொருளாதாரம்கல்வி குடும்ப பின்னணிமூத்த சகோதரர்கள் திருமணம் முடிக்காமைகுடும்பத்திற்கு ஏற்ற செல்வம்அந்தஸ்து அல்லது அழகுள்ள துணையை தேடுதல் முதலியன காரணமாக ஒருவரின் திருமண வயது தள்ளி போகிறது. இக்காரணிகள் கூட ஷரீயத்திற்கு புறம்பாக பாலியல் உறவுகளையும்தொல்லைகளையும் மேற்கொள்ள காரணமாகிவிடுகிறது.
இதனாலேயே இஸ்லாம் திருமண வயதை தள்ளி போடுவதை விரும்பவில்லை. திருமண வயது வந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோரின் கடமையாகும். ஆண்-பெண் இருவரது கற்பு பேணப்படல்சந்ததி பெருக்கம்,சமூகத்தின் நல்ல சூழல் உருவாகுதல் முதலியவையே  திருமண விசயத்தில் கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய அம்சங்களாகும். உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தனது கற்பை காத்து கொள்வதுடன் பிறருக்கும் தன்னால் ஆபத்து நேராது காத்து கொள்ள முடியும்.
பலதார மணம் :
பலதார மணத்தை இஸ்லாம் அங்கீகரித்தமையும்பாலியல் குற்றங்களை இல்லாதொழிக்க வகை செய்கிறது. பல்வேறுபட்ட காரணங்களால் ஒரு ஆண் மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்ய நாடுகிறான். இதற்கு தடை ஏற்படுத்தினால் விளைவு நல்லதாக அமையாது. ஒன்று அம்மனிதன் ஷரீயத்திற்கு முரணான விபச்சாரத்தின் மூலம் தனது இச்சையை தீர்த்துக்கொள்வான்.  அல்லது சமூகத்திற்கு தெரியாமல் இன்னுமொரு திருமணம் செய்ய நாடுகிறான். இது பின்னர் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது.
ஆண் - பெண் கலப்பு :
பருவ வயதை அடைந்த ஆண்கள் பெண்கள் தனிமையிலோ கூட்டாகவோ உரிய பாதுகாப்பின்றி ஒன்று கலந்து பணிகள் செய்யும் சகல விவகாரங்களிலும் இஸ்லாம் கடுமையான சட்டங்களை கொண்டிருகின்றது. இன்று பாடசாலைடியூஷன் வகுப்புகள்பல்கலைகழகங்கள்தொழில் நிலையங்கள்பூங்காக்கள்வர்த்தக நிலையங்கள் என அனைத்து பொது விசயங்களும் ஆண் - பெண் கலப்பிடங்கலாகவே காணப்படுகின்றன. இந்த இடங்களில் சொல்செயல் என இருவகையிலும் பெண்கள் பாலியல் இம்சைகளுக்கும் நோவினைகளுகும் உள்ளாகின்றனர். இவ்வாறான இடங்களில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு கூடியவரை பெண்கள் தனித்து சுதந்திரமாக இயங்கும் நிலைமை ஏற்படுத்தப்படுமானால் இப்போதைய நிலைமையை விட பெண்களின் பங்களிப்பையும்பெண்களிடமிருந்து சமூகத்திற்கு கூடுதல் செயல் திறனையும் எதிர்பார்க்கலாம்.
மக்கள் தொடர்பு துறைகள் (செய்திசினிமா) :
இஸ்லாம் கலையை மதிக்கிறது. அதை வளர்க்க ஊக்கம் வழங்குகிறது. ஆனால் மனித ஒழுக்கங்களை பாதிக்கும் எந்த கலையையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஊடகத்துறை படுவேகமாக வளர்ச்சியடைந்துள்ள இன்றைய நிலையில் அவ்வூடகதுறையின் கூறுகளான சில ஒளி - ஒலி பரப்புகள்அச்சுப் பதிப்புகள் இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுவதால் பாலியல் கிளர்ச்சிகளை தூண்டக்கூடிய காட்சிகள் மக்களை சென்றடைகின்றன. வெறுக்கத்தக்க இவ்வம்சங்கள் கலை என்ற பெயரில் அலங்கரித்து காட்டப்படுவதால் இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாக இலகுவாக வன்முறை இடம்பிடிதுவிடுவது மட்டுமல்ல இத்தகைய வன்முறைகளைஈவ்-டீசிங் போன்ற இம்சைகளை செய்வதற்கான உத்திகளும் இவ்வூடகங்களால் சொல்லிதரவும்படுகின்றன.
இவ்வகையில் தொலைக்காட்சிசினிமாபத்திரிக்கைகள்வானொலி நிகழ்சிகள் இவ்வுணர்வுகளை தீமூட்டி வளர்ப்பவையாக உள்ளன. இவற்றில் ஒலி ஒளி பரப்புக்கோஅச்சிக்கோ எவ்வித தடைகளையும் ஏற்படுத்த முடியாதுள்ளது. இஸ்லாமிய சட்ட அமைப்பில்இவை தான்தோன்றிதனமாக செயல்பட முடியாது. அவற்றிற்கு கட்டுபாடுகளும்ஒழுங்கும் விதிக்கப்படும்.
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இவை தவிர இன்னும் பல காரணிகள் பின்தளத்தில் இயங்க முடியும். எவ்வாறாயினும் இத்தீமையிலிருந்து சமூகத்தை பாதுகாக்க பெண்கள் மட்டுமின்றி இருபாலரும் இணைந்து இஸ்லாமிய நெறிமுறைகளை பயன்படுதுவார்களானால்   நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். இறைவன் நாடினால்..

நன்றி : ஏ1ரியலிசம்.காம்

No comments:

Post a Comment