Pages

Sunday, 16 December 2012

நாமென்ன முட்டாள்களா ??


                                                                           -  உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் 



இறைநம்பிகையாளர்களே.. விழித்திடுவீர்..
நாமென்ன முட்டாள்களா??
சிந்தித்து தெளிந்திடுவோம்..
வேண்டுமோ இன்னுமொரு முட்டாள்கள் தினம்??

ஸ்பெயினின் வரலாற்று சுவடுகளில்..
ஏப்ரல் மாத முதல் தேதி..
கருவறுக்க காத்திருந்த..
கயவர்கள் வென்ற தினம்..
முஸ்லிம்கள் முட்டாள்களாக..
முடக்கப்பட்ட தினம் அன்றோ??

ஈமானிய மன உறுதியோடு..
தீமைக்கு அஞ்சா துணிவோடு..
மாற்றுமத மக்களுக்கும்..
நெறிபிறழா நீதி வழங்கி..
ஏக இறையின் சட்டத்தை..
செயல்படுத்தி வந்த காலமது!

வான்மறையை கையிலேந்தி..
இறையச்சத்தை நெஞ்சிலேந்தி..
மார்க்கம் காட்டிய வழிதனிலே..
மாறா உண்மை முஸ்லிம்களாக..
வாழ்ந்துவந்த மக்கள் அங்கே!

கறைபடிந்த கயவர்களாம்..
மேற்குலக மார்க்க எதிரிகள்..
எண்ணூறு ஆண்டு கால..
இஸ்லாமிய நல்லாட்சிதனை..
வேரறுத்து சாய்த்து விட..
சூழ்ச்சிகள் பல செய்தனரே..
முயற்சியில் தோல்வியை தழுவினரே..

சூழ்ச்சிகளின் சூத்திரர்கள்..
சதிகார சல்லடைகள்..
ஒன்றுகூடி கூட்டமைத்து..
தோல்விக்கான காரணத்தை..
தோண்டி துருவி அலசினரே..

வேவுபார்க்கும் ஒற்றர்களை..
வார்த்தெடுத்து உட்செலுத்தி..
தோல்விக்கான காரணத்தை..
தெரிந்திடவே முனைந்தனரே..

ஊடுருவிய ஒற்றர்படை..
அலைந்தனரே.. திரிந்தனரே..
நாடுமுழுதும் அலசினரே..
கண்டிட்டார்கள் காரணத்தை..
உறுதியாக மக்கள் மனதில்..
இறைநம்பிக்கை.. இறையச்சம்..

புதிருக்கு விடைகிடைத்த..
பூரிப்போடு திரும்பினரே..
சூழ்ச்சியாளர் சூழ்ந்திருக்க..
சூளுரைத்தர் காரணத்தை..

உறுதிமிக்க ஈமானையும்..
ஏக இறை அச்சத்தையும்..
குலைத்திடவே.. குன்றிடவே..
சதித்திட்டம் தீட்டினரே..
சதிகார எதிரிவர்க்கம்..

மதுப்பழக்கம்.. புகைப்பழக்கம்..
இரண்டையுமே  இலவசமாய்..
ஊடுருவச் செய்தனரே..
வெற்றியும் அதில் கண்டனரே..

முஸ்லிம்களின் கோட்டையாம்..
கிரேனடா வீழ்ந்த தினம்தான்..
ஏப்ரல் மாத முதல் தேதி..
நீங்கள் இதை அறிவீரோ?


எண்ணூறு ஆண்டு கால ..
இஸ்லாமிய நல்லாட்சிதனை..
வீழ்த்திவிட்ட களிப்பினிலே..
முட்டாள்கள் தினமாக..
கொண்டாடி மகிழ்கின்றனரே..
மேற்குலக கயவர் கூட்டம்..

நாமெல்லாம் முஸ்லிம்கள் என..
மார்தட்டி கொள்கின்றோமே..
ஸ்பெயின் நாட்டு வரலாறு..
நம்மனதை உலுக்கவில்லை..
உணர்ச்சியற்ற ஜடம்போல..
உணர்வற்று கிடக்கின்றோமே..

ஊன் உண்டு.. உறக்கம் கண்டு..
ஊமைபோல அலைகின்றோமே..
எப்போது உணர்ச்சி பொங்கி..
எரிமலையாய் வெடிப்போம் நாம்??

சதிகாரர் சதிவலையை..
உலகம் முழுதும் விரிகின்றனரே..
கேடுகெட்ட கலாச்சாரத்தை..
நம்முள்ளும் திணிகின்றனரே..

அறிந்திருந்தும்.. தெரிந்திருந்தும்..
வாய்மூடி மௌனிக்கின்றோம்..
மதிமயங்கி நாமும் அதில்.
வீழ்ந்துதானே கிடக்கின்றோம்..
சிந்தித்து உணரவேண்டும்..
சீர்கேட்டைத் தடுக்க வேண்டும்..

பிறந்த தினம்.. இறந்த தினம்..
அன்னையர் தினம்.. அட்சையர் தினம்..
காதலர் தினமெனும் காம தினம்..
அனைத்திற்கும் ஒவ்வொரு தினம்..
கொண்டாடி.. கூத்தாடி..
வாழ்கின்றனரே வீண்வாழ்க்கை..

நரக நெருப்புக்கு இரையாகும்..
அவ்வீணர்வழி நாம் செல்லலாமோ?
எங்கே போனது உன் இறையச்சம்..
சிந்தித்திடு என் சகோதரா!

குறை யாரையும் கூறவில்லை..
குறை சொல்ல தேவையில்லை..
பொங்கி வருதே மனக்குமுறல்..
கொட்டிவிட்டேன் உங்கள் முன்னால்..
விழித்திடு என் சகோதரா!

மாநபி வாழ்ந்த வாழ்க்கை என்ன?
மாமறை கூறும் மார்க்கம் என்ன?
அறிந்திடுவோம்.. தெளிந்திடுவோம்..
விழித்து நாமும் எழுந்திடுவோம்..
மறுமையை நினைவு கூர்ந்திடுவோம்..
மறையோனிடமே பணிந்திடுவோம்




No comments:

Post a Comment