Pages

Monday, 24 December 2012

என்சோக கதையை கேளு தமிழகமே !

               -புதுக்குடி முஹம்மது  இப்ராஹிம் 

      


ஓட்டு கேக்க வரும்போது
ஒருகூடை பொய் சொன்னாங்க !
அரியணையில் ஏறியதும்
எங்களை ஆண்டியாக்கி விட்டாங்க !

தோண்டி தோண்டி எடுத்தாலும்
ஊழலுக்கு பஞ்சம் இல்லீங்க !
தேம்பி தேம்பி அழுதாலும்
கேக்க நாதி இல்லீங்க !

இலவசமாய் தர்ரோமுன்னு
எதைஎதையோ சொன்னாங்க !
இருப்பதையும் புடிங்கிகிட்டு
நடுத்தெருவில் விட்டாங்க !

பாலாறும் தேனாறும்
தெருவில் ஒடுமின்னாங்க !
பஞ்சம் பசி போக்ககூட
பாவிபசங்க வல்லீங்க !

சோறுகூட இலவசமுன்னு
வாக்குறுதி தந்தாங்க !
சொட்டுதண்ணி தரகூட
கட்சிக்காரன் இல்லீங்க !

விவசாயத்த பெருக்குவோமுன்னு
மேடைபோட்டு சொன்னாங்க !
விளைஞ்ச நெல்லை வாங்ககூட
வியாபாரிகள் இல்லேங்க !

டீவியோட மிக்சிகூட
லேப்டாப்பும் தந்தாங்க !
போட்டுபாக்க எப்போதும்
கரண்டு இருந்ததில்லீங்க !

குனிஞ்சி குனிஞ்சி எங்களுக்கு
கூனல் விழுந்து போச்சுங்க !
எழுந்து போக விடாமல்
டாஸ்மாக் அமுக்கி புடுதுங்க !

காலம்பூராம் எங்களுக்கு
கஷ்டத்த தான் தந்தாங்க !
கால் கடுக்க மறுபடியும்
ஓட்டு போட போறேங்க !

3 comments:

  1. கவர் தான் குடுத்துபுட்டு..

    பவருக்கு தான் வந்துடாங்க..

    கவரை வாங்கி அமுக்கிபுட்டு..

    பொலம்பி பிரயோஜனம் இல்லீங்க..

    - மண்ணின் மைந்தன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிலர் வாங்கியதால் அனைவருக்கும் பொருந்தாது !
      உடம்பை வலைக்க தெரியாத ஜென்மங்கள் திருந்தாது !

      Delete
  2. சில பேர் வாங்கி இருந்தா..
    சிதறி தோற்று போயிருப்பாங்க..
    பல பேர் வாங்கினதாலத்தான்..
    பலமா ஆட்சியை பிடிச்சாங்க..
    - மண்ணின் மைந்தன்

    ReplyDelete