- புதுக்குடி முஹம்மது இப்ராகிம்
அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாதது. அனைத்து விஷயங்களில் உள்ள நன்மையையும் தீமையும் அதை செயல்படுத்தும் விதத்தில் தான் உள்ளது. வாளின் கூர்மை நமை பாதுகாக்கவும் செய்யும் அதை முறையாக பயன்படுத்தாவிட்டால் நமது கரத்தையே பதம்பார்த்து விடுவதும் உண்டு.
2000 ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபலமான செல்போன் இன்று உலகங்கிலும் நிறைந்து காணப்படுகிறது. அதன் அவசியம் நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை அனைவரும் அறிந்ததே ! தொடக்கங்களில் செல்போன் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்தது பின்னர் புகைப்படம் எடுக்கும் காமிராவை அதில் புகுத்தினார்கள். அதன்பிறகு படிப்படியாக இன்டர்நெட், பேஸ்புக். ட்விட்டர், கேம்ஸ், ஸ்கைப் , போன்றவைகளுடன் அதன் வசதிகள் ஒரு கணினிக்கு இணையாக விரிவாகியது.
உலகத்தில் சுமார் 6 பில்லியன் சந்தாதாரர்கள் உள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. செல்போன் கோபுரங்கள் வெளியிடும் எலெக்ட்ரோ மக்னடிக் ரேடியேசன் ( Electro Magnetic Radiation ) என்ற கதிரின் பாதிப்பு மிகவும் மோசமானது அதாவது ப்ளட் பிரைன் பாரியர் ( blood brain barrier ) எனப்படும் மூளை ரத்தக்கசிவு நோயை உண்டாக்கும் சக்தி பெற்றது. மேலும் மூளை மற்றும் கர்ப்ப பையில் புற்று நோயை உண்டாக்கும் சக்தியும் இந்த கதிர் வீச்சுக்கு உண்டு என்பதாக கண்டறியப்பட்டுள்ளது .
இவ்வாறாக நோய்களின் அணிவகுப்பு ஒரு புறம் என்றால் மறுபுறம் சமுதாய சீர்கேடுகள் நமை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. தினமும் ஒரு செய்தியாவது பெண்களுக்கெதிரான செல்போன் குற்றங்கள் செய்திதாள்களில் பிரசுரமாகி இருக்கும். இந்தியாவில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளில் சுமார் 44 .5 சதவீதம் சைபர் க்ரைம் மூலமாக நடைபெறுவதாக இன்டெர் நேஷனல் சைபர் அக்டிவிட்டி ( I C A ) தெரிவித்துள்ளது அதில் குறிப்பாக செல்போன் மூலமாக ஏற்படும் குற்றங்கள் சுமார் 53 சதவீதமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
கடந்த இருமாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் சில கிராமங்களிலும் பீகாரில் சில கிராமங்களிலும் பெண்கள் செல்போன் உபயோகிப்பதை முழுமையாக தடைசெய்துள்ளனர். அதற்க்கு காரணமாக அவர்கள் தெரிவிப்பது செல்போன்களால் பெண்கள் தவறான பாதைக்கு திரும்புவதாக கிராமத்தினர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தெரிவிக்கிறது இந்த புள்ளி விபரங்கள் உங்களை பயமுறுத்துவதற்காகவோ குழப்புவதற்காகவோ பதியபட்டதல்ல மாறாக உங்களை எச்சரிக்கை செய்யவே !
ஒரு செல்போன் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்குமுன் அவர்களுக்கு செல்போன் தேவைதானா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு (மனைவி, மகள், மகன் ) செல்போன் எண்களை வாங்கும்போது உங்களின் பெயர் பதிந்து வாங்கி கொடுங்கள்.
அந்த எண்களின் இன்கமிங், அவுட்கோயிங் கால்கள் மற்றும் SMS விபரங்களை மாதந்தோறும் கண்காணியுங்கள்.
அப்படியானால் ஆண்கள் செல்போன் உபயோகிப்பது தவறில்லையா ?என்பது பற்றி நீங்கள் நினைப்பதை என்னால் ஊகிக்க முடிகிறது அதற்க்கான பதிலை நீங்கள் உங்களிடமே கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அதன் விளைவுகள் அனைவருக்கும் பொதுவானதே !
ஏக இறைவன் நம்மை பாதுகாப்பானாக !




No comments:
Post a Comment